​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் 'வாக் ஷீர்' தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்

Published : May 20, 2023 6:13 AM

இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் 'வாக் ஷீர்' தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்

May 20, 2023 6:13 AM

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான 'வாக் ஷீர்', அடுத்த ஆண்டு கடற்படையில் இணையவுள்ள நிலையில், கடல்வழி சோதனைகள் துவங்கியுள்ளன.

இந்திய கடற்படையின் 'புராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ், கடற்படைக்கு 6 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு, 5 கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்தியகடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஆறாவதும், இறுதியுமான டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்த  'வாக் ஷீர்' நீர்மூழ்கிக் கப்பலையும், மும்பையைச் சேர்ந்த மாஜேகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்தது.

கப்பலை கடலில் செலுத்தி உந்துவிசை அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் சென்சார் ஆகியவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்ட பரிசோதனைகள், அடுத்த சில மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் இணைக்கப்படும்.